Home வாழ் நலம் காய்ச்சலை குணமாக்கும் கோவைக்காய்!

காய்ச்சலை குணமாக்கும் கோவைக்காய்!

687
0
SHARE
Ad

kovai_002மார்ச் 12 – உணவுக்காகவும் மருத்துவத்துக்காகவும் பயிர் செய்யப்படுகின்ற பயனுள்ள மூலிகையாகவும் உணவு பொருளாகவும் கோவைக்காய் விளங்குகின்றது. காய்ச்சலைப் போக்கும் தன்மை கோவைக்கு உண்டு. கோவையின் வேர் வாந்தியை நிறுத்தும் வல்லமை வாய்ந்தது.

கோவை இலைச்சாறு கடும் உடல் வலியைத் தணிக்கக் கூடியது. கோவை இலை தோல் நோய்களுக்கு மேற்பூச்சு மருந்தாகிறது. தோலில் உண்டாகும் அரிப்பு, கொப்புளங்கள், வேர்க்குரு, வெடிப்புகள் விலகிப்போக உன்னதமான மருந்தாக கோவை இலை உபயோகப்படுகின்றது.

ht2421கோவை வேர் கிழங்குபோல திரண்டு இருக்கும். கிழங்கு “புரோட்டோ சோவா” என்னும் நோய்தரும் ஒட்டுண்ணிகளை அழிக்கக் கூடிய உன்னதமான மருந்தாகிறது. கோவையின் பழங்கள், இலைகள், வேர்கள் அனைத்தும் சர்க்கரை நோயைத் தணிக்கும் தன்மையுடையது.

#TamilSchoolmychoice

கோவையின் சமூலம் நாடித்துடிப்பு குறைந்த போதும் வலிப்பு ஏற்படும் போதும், ஈரல் நோயுற்ற போதும் மருந்தாகப் பயன்படுகின்றது. கோவை இலைச் சாற்றை விஷக் கடிகளுக்குப் பூசலாம் என்றும், கோவை இலை உஷ்ணத்தையும், வியர்வையையும் உண்டாக்கும் தன்மையுடையது.

1024px-A_creeper_of_the_hedges_and_its_fruitஇலைத் தீநீர் நீரடைப்பு, ஆறாப்புணக்கள், சொறி, சிரங்கு, இருமல் இவற்றைப் போக்கும் என்றும் சித்த மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கோவையின் இலையைச் சுரணித்து சாப்பிடுவதால் உடம்பின் சூடு தணியும் என்றும், நீரடைப்பு, கரப்பான், இருமல் இவைகள் குணமாகும்.

இலைச்சாற்றை வெண்ணெய்யோடு குழைத்துப் பூச சிரங்கு, சொறி இவைகள் விரைவில் ஆறும் என்றும், கோவையின் கிழங்கு நீரிழிவு, குட்டம், இரைப்பு, நாப்புண் இவைகளும் குணமாகும் எனவும் தெரிவிக்கின்றன.