Home நாடு நூருல் இசா கைது மலேசியாவிற்கு மற்றொரு தலைகுனிவு – சிவராஜா கருத்து

நூருல் இசா கைது மலேசியாவிற்கு மற்றொரு தலைகுனிவு – சிவராஜா கருத்து

748
0
SHARE
Ad

tmi-sivarraajh-nov26_300_274_100கோலாலம்பூர், மார்ச் 17 – லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா அன்வார் மீதான கைது நடவடிக்கை, உலக அளவில் மலேசியா மீதான மரியாதையைக் குறைத்துள்ளதோடு, கண்டனங்களையும் பெற்றுள்ளதாக மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் சி.சிவராஜா கருத்துத் தெரிவித்துள்ளார்.

“இந்த நடவடிக்கை மலேசியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்நாட்டில் உள்ள கருத்து சுதந்திரமும் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது” என்று சிவராஜா கூறியுள்ளார்.

மேலும், எங்கேயோ சில தவறுகள் நடக்கின்றன என்று குறிப்பிட்டுள்ள சிவராஜா, விசாரணைக்காக காவல்நிலையம் சென்ற நூருலை, அதற்கு தொடர்பில்லாத மற்றொரு குற்றத்தை கூறி காவல்துறை கைது செய்துள்ளது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று என்றும் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“நூருல் இசா மீதான இந்த கைது நடவடிக்கை அவரை மேலும் உறுதியான மற்றும் ஈடுபாடு கொண்ட தலைவராக உருவாக்கும். இந்த அனுபவம் அவரை ஒரு சிறந்த தலைவராக தக்க வைக்கும். நூருலின் தந்தை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை சிறையில் அடைத்துவிட்டனர். தற்போது அவரது மகளையும் கைது செய்தாகிவிட்டது. அடுத்து யார்?” என்று சிவராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நீதித்துறை குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு, நேற்று கைது செய்யப்பட்ட லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் உதவித் தலைவருமான நூருல் இசா அன்வார், இன்று வாக்குமூலம் அளித்த பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.