Home உலகம் கிரிக்கெட் காலிறுதிச் சுற்று: இன்று ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்!

கிரிக்கெட் காலிறுதிச் சுற்று: இன்று ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்!

508
0
SHARE
Ad

australia-world-cup-openerஅடிலெய்டு, மார்ச் 20 – உலக கோப்பை தொடரில் அடியெல்டு ஓவல் மைதானத்தில் இன்று நடக்கும் 3-வது கால் இறுதியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி, அரை இறுதியில் இந்தியாவை எதிர்கொள்ளும். சொந்த மண்ணில் போட்டி நடப்பது, வலுவான பந்துவீச்சு, பேட்டிங் வரிசை என முழு நம்பிக்கையுடன் காணப்படுகிறது ஆஸ்திரேலியா.

லீக் சுற்றில் கூட அந்த அணி நியூசிலாந்திடம் மட்டுமே தோற்றுள்ளது. வார்னர், பிஞ்ச், மேக்ஸ்வெல் என அதிரடி மன்னர்கள் கொண்ட பேட்டிங் வரிசையும், ஸ்டார்க், ஜான்சன், பலுக்னர், கம்மின்ஸ் போன்ற அபாயகரமான பந்துவீச்சாளர்களும் ஆஸ்திரேலியாவின் பலமாக கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

பாகிஸ்தானை பொறுத்த வரையில் பேட்டிங் வரிசையில் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்கள் யாருமில்லை. கேப்டன் மிஸ்பா உல் ஹக் மட்டுமே பொறுப்புடன் ஆடுகிறார். கடைசி லீக் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக சர்பிராஷ் அகமது சதம் அடித்துள்ளார்.

மற்றபடி, வலுவான பேட்டிங் வரிசை இல்லாதது பின்னடைவு. அதே நேரத்தில், அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது இர்பான் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் பாகிஸ்தானின் பந்துவீச்சை பலவீனமாக்கி உள்ளது.

ஆனாலும், பாகிஸ்தானின் ஒரே நம்பிக்கை. லீக் சுற்றில் முதல் 2 போட்டியில் தோற்றாலும், அடுத்து வரிசையாக 4 வெற்றியுடன் கால் இறுதிக்குள் நுழைந்துள்ளது. அந்த வெற்றியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தொடர பாகிஸ்தான் முயற்சி செய்யும்.

அடிலெய்டு மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வெற்றியை நிர்ணயிப்பவர்கள் வேகப்பந்து வீச்சாளர்களாகத் தான் இருப்பார்கள். இப்போட்டி மலேசிய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.