கோலாலம்பூர், மார்ச் 22 – இந்தியாவில் புகழ்பெற்ற ஹோலி கொண்டாட்டங்கள், ஒரு வாரம் கழித்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன.
ஈப்போ சாலையில் உள்ள ஜாலான் காசிப்பிள்ளை வளாகத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ இலட்சுமி நாராயணன் ஆலயத்தில் வண்ணங்களைப் பீய்ச்சியடித்து, ஹோலி குதூகலமாகக் கொண்டாடப்பட்டது.
அந்தக் காட்சிகளில் சிலவற்றை இங்கே காணலாம்:-
கண்ணாடி மட்டும்தான் கறுப்பு – முகம் முழுக்க விதம் விதமான வண்ணங்கள்…
வண்ணப் பொடிகளை ஊதி மகிழும் சில வெளிநாட்டுப் பயணிகள்…
வண்ணப் பொடியை முகத்தில் வாரி இறைத்துக் கொள்ளும் பெண்மணி ஒருவர்
ஹோலிக் கொண்டாட்டத்தில் திரளாகக் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்…
படங்கள் : EPA