Home உலகம் 2030-ல் உலக அளவில் 40 சதவீத தண்ணீர் தட்டுப்பாடு  – ஐ.நா எச்சரிக்கை!

2030-ல் உலக அளவில் 40 சதவீத தண்ணீர் தட்டுப்பாடு  – ஐ.நா எச்சரிக்கை!

871
0
SHARE
Ad

waterநியூயார்க், மார்ச் 22 – தண்ணீரை சரியான முறையில் பயன்படுத்தாமல் அதிக அளவில் வீணாக்குவதன் மூலம் எதிர்வரும் 2030-ம் ஆண்டிற்குள் உலகம் 40 சதவீத தண்ணீர்  தட்டுப்பாட்டை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு மக்கள் தொகை பெருக்கம், மழை நீர் சேகரிப்பு இல்லாதது மற்றும் நிலத்தடி நீர் குறைவது போன்றவையும் மிக முக்கிய காரணிகளாக உள்ளன என்றும் ஐ.நா கூறியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஐநா உலக நீர் வளம் தொடர்பான ஆய்வை மேற்கொள்ளும். இந்த ஆண்டு மேற்கொண்ட ஆய்வின் முடிவில், அடுத்த 15 ஆண்டுகளில் உலக அளவில் ஏற்பட இருக்கும் நீர் பற்றாக்குறை பற்றி முழு அளவிலான அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “உலக நாடுகள் தங்கள் நீர் வளங்களை பாதுகாக்காமல் தண்ணீர் பெருக்கத்தில் எந்தவொரு முன்னேற்றமும் காண முடியாது. தங்கள் நாடுகளில் அனைத்து நீர் ஆதாரங்களிலும் அத்தியாவசியம் இல்லாமல் வீணாக்கப்படும் தண்ணீரை கண்காணித்து குறைக்க வேண்டும். இல்லை எனில் 2015-ம் ஆண்டில் உலகம் 40 சதவீத தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.”

#TamilSchoolmychoice

“உலக அளவில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, போதுமான அளவில் இருந்த நீர் ஆதாரங்கள் குறைந்து விட்டன. அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள மேற்கொள்ளவில்லை. இந்த நிலை நீடித்தால் 2050-ம் ஆண்டில் இந்த பற்றாக்குறை 55 சதவீதமாக அதிகரிக்கும்.”

“இந்த தண்ணீர் தட்டுப்பாடு விவசாயம் மற்றும் தொழிற்துறை உள்ளிட்டவற்றையும் பாதிக்கும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தண்ணீரை பாதுகாப்பது மற்றும் கழிவு நீரை சுழற்சி செய்து பயன்படுத்துவது போன்ற காரணங்களை வலியுறுத்தி தண்ணீர் கொள்கைகளை மறு பரிசீலினை செய்யுமாறு உலக நாடுகளுக்கு ஐநா அழைப்பு விடுத்துள்ளது.