Home உலகம் தந்தைக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு லீ சியான் லூங் நன்றி!

தந்தைக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு லீ சியான் லூங் நன்றி!

1188
0
SHARE
Ad

mr-lee-hsien-loong-dataசிங்கப்பூர், மார்ச் 22 – சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூவின் உடல் நிலை மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, அவர் நலம் பெற பொதுமக்கள் பலரும் தொடர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் லீ குவான் இயூவின் மகனும் சிங்கப்பூரின் பிரதமருமான லீ சியான் லூங் இன்று பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

mr-lee-hsien-loong-data2லீ குவான் இயூ சிகிச்சை பெற்று வரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு இன்று காலை 10  மணியளவில் தனது மனைவி ஹோ சிங்குடன் வருகை தந்திருந்த லீ சியான் லூங், தனது தந்தைக்காக மருத்துவமனை வளாகத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பொது மக்களை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.