Home உலகம் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வென்று, அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் நியூசிலாந்து

கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வென்று, அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் நியூசிலாந்து

561
0
SHARE
Ad

martin-guptill-ton-celebவெலிங்டன் (நியூசிலாந்து) மார்ச் 22 – ஆஸ்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் மாறி மாறி நடந்து வரும் உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பான அரையிறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில், நியூசிலாந்து வெஸ்ட் இண்டீசை நொறுக்கித் தள்ளி அரையிறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றதன் வழி அடுத்த தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகின்றது.

நேற்றைய ஆட்டத்தில் முதலில் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச, நியூசிலாந்து பந்துகளை அடிக்கும் தேர்வைச் செய்தது.

#TamilSchoolmychoice

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பிரன்டன் மெக்கல்லமும், மார்ட்டின் கப்திலும் இறங்கினர். எல்லோரும் எதிர்பார்த்த மெக்கல்லம் 12 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்திலிருந்து வெளியேறினார்.

நியூசிலாந்து 393 ஓட்டம்

முதல் பாதி ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 393 ரன்கள் குவித்தது.

அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 30.3 ஓவர்களில் 250 ஓட்டம் மட்டுமே எடுத்து எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் நியூசிலாந்து அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலகக் கிண்ண வரலாற்றில், 7-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. கப்தில் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

வருகிற 24-ந்தேதி நடக்கும் முதலாவது அரைஇறுதியில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி முதல் முறையாக இறுதி சுற்றை எட்டும்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.