Home உலகம் அமெரிக்காவுடன் அணு ஆயுத போருக்கு தயார் – வட கொரியா தூதர் அறிவிப்பு!

அமெரிக்காவுடன் அணு ஆயுத போருக்கு தயார் – வட கொரியா தூதர் அறிவிப்பு!

519
0
SHARE
Ad

41ffac1afbd346ec8e809d50071f72b7_18லண்டன், மார்ச் 22 – அமெரிக்காவுடன் அணு ஆயுத போரில் ஈடுபட வட கொரியா என்றும் தயாராக இருப்பதாக, அந்நாட்டிற்கான பிரிட்டன் தூதர் ஹியுன் ஹக் பாங் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவின் எல்லைப்பகுதியில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து போர் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. இது இரு நாடுகளின் கூட்டுப் பயிற்சியே என அமெரிக்கா கூறிக்கொண்டாலும், வட கொரியாவை அச்சுறுத்தவே இத்தகைய செயல்களை செய்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் இத்தகைய செயல்கள் தொடருமானால் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக ஹக் பாங் கூறியுள்ளார்.

மேற்கு லண்டனில் உள்ள அக்டன் தூதரக அலுவலகத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேற்கூறியவாறு தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், அவர் “அணு ஆயுதத்திற்கான பொத்தானை யார் முதலில் அழுத்தவது என்று தொடர்ந்து கேட்கின்றனர். நாங்கள் எப்போதும் அமைதியை விரும்புபவர்கள். ஆகையால் போரை விரும்பவில்லை. ஆனால் போரை கண்டு நாங்கள் அஞ்சவும் இல்லை. இது தான் எங்கள் அரசின் கொள்கை” என்று கூறியுள்ளார்.

கூட்டு பயிற்சி என்பது இரு நாடுகளின் பாதுகாப்பு நடவடிக்கை என அமெரிக்காவும் தென்கொரியாவும் கூறி வந்தாலும், வடகொரிய எல்லையின் ஆக்கிரமிப்பு முயற்சி இந்த கூட்டு பயிற்சி என வட கொரிய வட்டாரங்கள் கூறுகின்றன.