Home உலகம் விமான விபத்தை தடுக்க ஆட்டொ பைலட் தொழில்நுட்பம் மட்டும் போதுமா?

விமான விபத்தை தடுக்க ஆட்டொ பைலட் தொழில்நுட்பம் மட்டும் போதுமா?

926
0
SHARE
Ad

autopilot1பாரிஸ், ஏப்ரல் 4 – ஜெர்மன் விங்ஸ் விமானத்தின் தானியங்கி விமானம் செலுத்தும் ஆட்டொ பைலட் தொழில்நுட்பம் மலை முகட்டில் மோதுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் விமானியை எச்சரிக்கும் வகையில் ஆபாய மணியை ஒலித்துள்ளது.

மேலும், தாழ்வாகப் பறக்கும் விமானத்தை மேல்நோக்கி செலுத்தவும் கட்டளையிட்டுள்ளது. எனினும், துணை விமானி அதனை கண்டுகொள்ளாது விமானத்தை விபத்திற்குள்ளாக்கியது கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது கறுப்பு பெட்டியின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

துணை விமானியின் கொலைபாதக செயல் வெட்ட வெளிச்சமாகி உள்ள நிலையில், விமானத்தின் ஆட்டொ பைலட் தொழில்நுட்பம் பற்றியும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. அறிவியலும், நவீனமும் பெரிய அளவில் வளர்ந்துள்ள கால கட்டத்தில், ஆட்டொ பைலட் தொழில்நுட்பம் வெறும் எச்சரிக்கை செய்யும் அமைப்பாகவே இருந்துள்ளது என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

கார் போன்ற வாகனங்களில் கூட விபத்து நடைபெறுவதற்கு முன்னர் தானியங்கியாக வேகத்தை குறைக்கும் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், விமானத்தில் ஆட்டொ பைலட் தொழில்நுட்பத்தின் கட்டளைகளை விமானி கேட்கவில்லை எனில், தாழ்வாக பறந்து கொண்டிருக்கும் விமானத்தை தானியங்கியாக மேல் எழுப்ப, ஆட்டொ பைலட் தொழில்நுட்பத்தால் ஏன் முடியவில்லை என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.