Home நாடு மகாதீர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு கிடையாது – ஐஜிபி தகவல்

மகாதீர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு கிடையாது – ஐஜிபி தகவல்

571
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 3 – பிரதமர் நஜிப் மீது அல்தான்துன்யா கொலை தொடர்பிலும், 1எம்டிபி தொடர்பிலும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்திருக்கும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயாது என காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.

Khalid abu Bakarஎதற்கெடுத்தாலும் எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்தும் காவல்துறையினர் மீது அண்மையக் காலமாக எதிர்ப்புகளும், கண்டனங்களும் வலுத்து வருகின்றன.

“மகாதீர் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பற்றி ஏற்கனவே மற்றவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். மகாதீர் மட்டும் இதைப் பற்றி பேசவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இதில் தேசநிந்தனைக் குற்றச்சாட்டு என்று எதுவும் இல்லை” என்றும் காலிட் அபு பாக்கார் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபின்னர் பத்திரிக்கையாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மகாதீரின் வலைப் பதிவு மீது இதுவரை யாரும் காவல் துறையில் புகார் எதையும் தெரிவிக்கவில்லை என்றும் காலிட் உறுதிப்படுத்தியுள்ளார்.