Home Featured நாடு அஸ்மின் அலிக்கு எதிராக காவல் துறை விசாரணை!

அஸ்மின் அலிக்கு எதிராக காவல் துறை விசாரணை!

777
0
SHARE
Ad

Azmin Aliஷா ஆலாம் – காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்காரின் மகள் நடத்திவரும் சுடும் ஆயுதங்கள் விற்பனை வணிகம் தொடர்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவித்த சில கருத்துகளுக்காக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டிருக்கின்றார்.

ஷா ஆலாமிலுள்ள காவல் துறைத் தலைமையகத்தில் நேற்று மாலை 5.00 மணிக்கு வந்த அஸ்மின் அலி, காவல் துறையினரிடம் தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

இந்த ஆண்டின் மே மாதத்தில் தான் ஆற்றிய உரையின் ஒரு பகுதி தன்னிடம் இன்று காணொளியாகக் காட்டப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாகவும், அந்த விசாரணை குறித்து தாங்கள் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் அஸ்மின் அலி கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“காலிட்டின் மகள் சுடும் ஆயுதங்கள் விற்பனை நிலையத்தை நடத்துவது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டது ஐஜிபியின் மகள் மீது நான் குற்றச்சாட்டு கூறுகின்றேன் என்ற ரீதியில் விசாரிக்கப்படுகின்றது. தான் ஐஜிபி ஆவதற்கு முன்பாகவே தனது மகள் சுடும் ஆயுத விற்பனைக்கான அனுமதியைப் பெற்றிருந்தார் என ஐஜிபியே ஒப்புக் கொண்டிருந்தார் என்பதை உறுதிப்படுத்தும் பத்திரிக்கை செய்தியை நான் எனது வாக்குமூலத்தில் சமர்ப்பித்தேன்” என்றும் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

ஐஜிபியின் மகள் சுடும் ஆயுதங்கள் விற்பனை நிலையம் நடத்துவதற்கான அனுமதியை எவ்வாறு பெற்றார் என்பதை விசாரிக்க வேண்டும் என்று மட்டுமே தான் கேட்டுக் கொண்டதாகவும் அஸ்மின் அலி மேலும் தெரிவித்துள்ளார்.