கோலாலம்பூர், ஏப்ரல் 23 – செபுத்தே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் சட்ட விரோதமாக தன்னை கைது செய்ததாக அரசாங்கத்தின் மேல் தொடுத்த சிவில் வழக்கை நேற்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதேவேளையில், செலவுத் தொகையாக அரசாங்கத்திற்கு 50,000 ரிங்கிட் செலுத்த வேண்டும் என்றும் திரேசா கோக்கிற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2008-ஆம் ஆண்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திரேசா கைது செய்யப்பட்டது, சட்டப்படியானது என நீதிமன்றம் ஏற்றுக் கொளவதக நீதிபதி சூ கியோக் குயாம் தமது தீர்ப்பில் கூறினார்.
ஆதலால், பிரதிவாதி மேல் தொடுத்த வழக்கை செலவுத் தொகையுடன் நீதிமன்றம் தள்ளுபடி செய்கின்றது. பிரதிவாதிக்கு செலவுத் தொகையாக 50,000 ரிங்கிட் செலுத்தும்படி வாதிக்கு நீதிமன்றம் ஆணையிடுகிறது என அவர் கூறினார்.