செபுத்தே-வில் ‘கோக்’ கொண்ட ஒரே பெண் (woman with a “Kok”) என்று விவசாயம் மற்றும் வேளாண்மை சார்ந்த துறையின் துணையமைச்சரான தாஜுடின் தன்னைக் குறிப்பிட்டதாக தெரேசா கோக் குற்றம் சாட்டியுள்ளார்.
“அவர் தனது கருத்திற்காக மன்னிப்புக் கேட்கவில்லை என்றால், பிரதமர் அவரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும்”
“நான் அவரைத் தொந்தரவு செய்யவில்லை. ஆனால் அவர் அனைத்து ஆபாசக் கருத்துகளையும் குறிப்பிட்டுள்ளார்” என்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரேசா கோக் தெரிவித்துள்ளார்.