தோக்கியோ – இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஜப்பானிய நேரப்படி 5.59 மணிக்கு ஜப்பானின் வட பசிபிக் கடலோரத்தில் 6.9 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புக்குஷிமா நகரில் கடலோரத்தில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையமிட்டு உருவாகிய இந்த நிலநடுக்கம் ஜப்பானியத் தலைநகர் தோக்கியோ வரை உணரப்பட்டது.
இதன் மூலம் சுனாமி ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புக்குஷிமாவின் ஒனாஹாமா துறைமுகப் பகுதியில் இரண்டு அடிகள் உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்த வேளையில், அதன் பின்னர் சற்று நேரத்தில் 3 அடி உயர சுனாமி அலைகள் சோமா என்ற பகுதியில் எழுந்தன.
2011-ஆம் ஆண்டில் இதே புக்குஷிமா பகுதியில் தான் ஜப்பானின் வரலாற்றில் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டு, பல உயிர்களையும் பலிவாங்கி சேதங்களையும் ஏற்படுத்தியது என்பதால், மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
10 அடிகள் உயரத்துக்கு சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.