Home Featured நாடு சைவ உணவுத் திட்டத்திற்கு இந்துதர்ம மாமன்றம் வரவேற்பு!

சைவ உணவுத் திட்டத்திற்கு இந்துதர்ம மாமன்றம் வரவேற்பு!

800
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சுகாதார அமைச்சின் சைவ உணவுத் திட்டத்திற்கு மலேசிய இந்துதர்ம மாமன்றம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து மலேசிய இந்துதர்ம மாமன்றம் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கை பின்வருமாறு:-

radhaji“அரசாங்க மருத்துவமனைகளிலும் இதர சில சிகிச்சையகங்களிலும் உள்ள உணவகங்களில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்காக சைவ உணவு விற்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது மிகவும் வரவேற்கதக்கது.”

#TamilSchoolmychoice

“சுகாதார அமைச்சின் ஆணைப்படி நடைமுறைபடுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்கு மலேசிய இந்து தர்ம மாமன்றம் பேராதரவு வழங்குகின்றது என்பதை இதன்வழி மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்து தர்மத்தின் அடிப்படையில் ஊன் உணவைத் தவிர்த்து சைவமாக உண்ணும் இந்துக்களுக்கு சைவ உணவக அமலாக்கம் பெரும் ஆறுதலை  ஏற்படுத்தியுள்ளது.”

“மருத்துவமனைகளில் நோயாளிகளும் நோயாளிகளைப் பார்க்க வருபவர்களும் சைவ உணவையே பெரும்பாலும் கேட்கின்றனர் என்றும், இதனால் சைவ உணவின் தேவை அதிகரித்து வருகின்றது என்பதாலும் இத்திட்டம் அமலாக்கம் காணவுள்ளது என அமைச்சகப் பொது இயக்குநர் டத்தோ முனைவர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.”

“சைவத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்குச் சைவ உணவு கிடைக்காமல் மிகுந்த சிரமமப்பட வேண்டியிருந்த சூழல் இத்திட்டத்தினால் களையப்படும். மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஒரு சிறந்த திட்டத்தை அமல்படுத்தவுள்ள சுகாதார அமைச்சுக்கு இவ்வேளையில் மலேசிய இந்துதர்ம மாமன்றம் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது.”

“மருத்துவமனைகள் மட்டுமின்றி நெடுஞ்சாலையோர ஓய்வகங்கள், பள்ளிக்கூடங்கள், மேற்கல்விக்கூடங்கள் மற்றும் பிற பொது இடங்களிலும் சைவ உணவகங்கள் திறக்கப்பட வேண்டும். தவிர, அனைவருமே சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவான சைவ உணவு வகைகளைச் சாப்பிட்டு உடல் நலத்தைப் பேணவும் முடியும்.”

“ஆகவே, இத்திட்டத்தை நாடெங்கிலும் பரவலாகச் சைவ உணவகங்களை அமல்படுத்தும்படி மலேசிய இந்துதர்ம மாமன்றம் மலேசிய இந்துக்களின் சார்பில் கோருகின்றது” என தமதறிக்கையில் இந்துதர்ம மாமன்ற தேசியத் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை குறிப்பிட்டுள்ளார்.