Home Featured தமிழ் நாடு தமிழகம்: 4 இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன!

தமிழகம்: 4 இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன!

821
0
SHARE
Ad

NARAYANASAMY-Puthucheri CM

சென்னை – தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர், அந்த பரபரப்புக்கு இணையாக நடைபெற்று முடிந்த நான்கு சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளியாகின்றன.

இன்று காலை 8.00 மணி முதல் (இந்திய நேரம்) வாக்கு எண்ணிக்கைகள் தொடங்குகின்றன. காலை 11.00 மணிக்குள் முடிவுகள் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

தஞ்சாவூர், அரவக் குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச் சேரி மாநிலத்தின் நெல்லித் தோப்பு ஆகிய நான்கு சட்டமன்றங்களில் இடைத் தேர்தல்கள் நடைபெறுகின்றன.

தமிழகத்தின் மூன்று தொகுதிகளின் வெற்றி தோல்விகள் தமிழக அரசியலில் எந்தவித குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், நெல்லித்தோப்பு தொகுதி முடிவு அனைத்துத் தரப்புகளாலும் ஆர்வத்துடன் கண்காணிக்கப்படுகின்றது.

காரணம், நடப்பு புதுச் சேரி முதல் நாராயணசாமி (படம்) தொடர்ந்து தனது பதவியில் நீடிப்பாரா என்பதை நிர்ணயிக்கப் போகின்றது நெல்லித்தோப்பு தொகுதி முடிவுகள்.