Home One Line P2 புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை இழந்தது

புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை இழந்தது

592
0
SHARE
Ad

புதுச்சேரி : யூனியன் பிரதேச மாநிலமான புதுச் சேரியில் அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அங்கு ஆட்சி செலுத்தும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

ஆகக் கடைசியாக இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 21) பிற்பகலில் இலட்சுமி நாராயணன் என்ற ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியிலிருந்து விலகினார்.

தற்போதைய நிலவரப்படி 28 சட்டமன்றங்களைக் கொண்ட புதுச் சேரியில் 13 இடங்களை மட்டுமே நாராயணசாமியின் (படம்) தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து அங்கு ஆட்சி கவிழ்ந்து புதுச்சேரியில் அதிபராட்சி அமுலாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்கனவே புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.