Home One Line P1 கொவிட் தடுப்பூசிகள் கோலாலம்பூர் வந்தடைந்தன

கொவிட் தடுப்பூசிகள் கோலாலம்பூர் வந்தடைந்தன

800
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவுக்கான முதல்கட்ட பிபைசர் தடுப்பூசிகள் இன்று பலத்த பாதுகாப்புடன் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தன.

சிறப்பு சரக்கு விமானத்தில் குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் அந்த தடுப்பூசிகள் விமான நிலையத்தில் வந்தடைந்த காட்சிகளையும், பாதுகாக்கப்படும் இறக்கப்பட்ட காட்சிகளையும் பிரதமர் மொகிதின் யாசின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

மாஸ் கார்கோ சிறப்பு விமானத்தில் ஏற்றப்பட்டு இந்த கொவிட் தடுப்பூசிகள் நமது நாட்டை வந்தடைந்தன.

#TamilSchoolmychoice

அந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளும் முதல் நபராக மொகிதின் யாசின் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொவிட் தடுப்பூசி போடும் திட்டம் கட்டம் கட்டமாக எதிர்வரும் பிப்ரவரி 26 முதல் தொடங்கப்படுகிறது.