Home உலகம் ஒபாமாவின் மின்னஞ்சல்களை படித்த ரஷ்ய ஹேக்கர்கள் – அதிகாரிகள் அதிர்ச்சி!

ஒபாமாவின் மின்னஞ்சல்களை படித்த ரஷ்ய ஹேக்கர்கள் – அதிகாரிகள் அதிர்ச்சி!

403
0
SHARE
Ad

OBAMAS-EMAILS-HACKEDவாஷிங்டன், ஏப்ரல் 27 – அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மின் அஞ்சல்களை ரஷ்யாவை சேர்ந்த இணைய ஊருவல்காரர்கள் (ஹேக்கர்கள்) படித்ததாக தெரியவந்துள்ளது.

மிகவும் அதிநவீன பாதுகாப்பு வசதிகளை கொண்ட நாட்டின் அதிபர் எழுதிய மின் அஞ்சல்கள் ஹேக்கர்களால் படிக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் இச்சம்பவம் நடந்துள்ளது. அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கும் மற்றும் இதர அதிகாரிகளுக்கும் எழுதிய மின் அஞ்சல்கள் படிக்கப்பட்டதாக ‘நியூயார் டையம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் அந்த மின்னஞ்சல்களில் தூதுவர்கள் மற்றும் தூதரக பணியாளர்களுடன் முக்கிய வேலைகள் பற்றி நடத்தபட்ட விவாதங்கள், நிகழ்ச்சிகளுக்கான கால அட்டவணைகள் போன்ற பல முக்கிய தகவல்கள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒபாமாவின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கை ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.