Home நாடு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக மன்னர் மன்னன் தேர்வு!

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக மன்னர் மன்னன் தேர்வு!

816
0
SHARE
Ad

100_7630

கோலாலம்பூர், ஏப்ரல் 27 – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு பேராசிரியர் மன்னர் மன்னன் தேர்வாகியுள்ளார். இது குறித்து மன்னர் மன்னன் கூறியதாவது;

“மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு என்னைத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பேசப்பட்டபோது, போட்டி என்றால் வேண்டாம். போட்டி இல்லையென்றால் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினேன்”.

#TamilSchoolmychoice

“போட்டி என்றால் எனக்குப் பயம் இல்லை. ஆனால் இன்னொருவார் இப்பதவிக்கு விரும்பும்போது, நாம் விட்டுக்கொடுப்பது முறை என்று நான் நினைத்தேன்” என்று கூறியுள்ளார் மன்னர் மன்னன்.

நேற்று தலைநகர் கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் நடைபெற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 53-ஆம் ஆண்டு கூட்டத்தில் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், மன்னர் மன்னன் கூறுகையில்; “தொடர்ந்து சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் உண்டு. என்னால் இயன்றவரை நான் இச்சங்கத்திற்காக உழைப்பேன்” என்று கூறினார்.

தொடர்ந்து 2015 முதல் 2017 ஆம் ஆண்டுக்கான நிர்வாகத்தினர் தேர்தெடுக்கப்பட்டனர். அதற்கான பொறுப்பை டத்தோ வி.எல். காந்தன், ஈப்போ இரா.மாணிகம் ஆகியோர் ஏற்றிருந்தனர்.