Home கலை உலகம் ‘ரஜினிமுருகன்’ படபிடிப்பு முடிந்து பிரியாணி விருந்தளித்த சிவகார்த்திகேயன்! (படங்களுடன்)

‘ரஜினிமுருகன்’ படபிடிப்பு முடிந்து பிரியாணி விருந்தளித்த சிவகார்த்திகேயன்! (படங்களுடன்)

653
0
SHARE
Ad

rajini_murugan_ol004சென்னை, ஏப்ரல் 27 – ‘காக்கி சட்டை’ வெற்றி படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் ‘ரஜினி முருகன். வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி, உள்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் என்.லிங்குசாமி தயாரித்து வருகிறார்.

rajini_murugan_ol009பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்கிய ரஜினி முருகன் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு  பெற்றதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

#TamilSchoolmychoice

rajini_murugan_ol011நேற்றைய இறுதி நாளில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இணைந்து குழுவாக புகைப்படம் எடுத்து அதை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.

rajini_murugan_ol008பின்பு சிவகார்த்திகேயன் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி விருந்தளித்தார். ஜூலையில் வெளியாகவுள்ள ‘ரஜினி முருகன்’ படத்தின் முன்னோட்ட பணிகள் அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

rajini_murugan_ol013

rajini_murugan_ol016

rajini_murugan005

rajini_murugan004