Home நாடு ஆசியான் சமூகத்தை உருவாக்குவதே நமக்கு கிடைக்கும் வெற்றி – மாநாட்டில் நஜிப் உரை

ஆசியான் சமூகத்தை உருவாக்குவதே நமக்கு கிடைக்கும் வெற்றி – மாநாட்டில் நஜிப் உரை

515
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 28 –  கோலாலம்பூரிலும், லங்காவி தீவிலும் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள 26-வது ஆசியான் உச்சநிலை நேற்று கோலாலம்பூர் மாநாட்டு மண்டபத்தில் தொடங்கியது.ஆசியானின் பத்து நாட்டுத் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த 10 நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பே ஆசியான் என்று அழைக்கப்படுகிறது.இதற்கு முன்னர் ஆசியான் மாநாடுகளை கடந்த 1977-ம் ஆண்டு மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் மலேசியா ஏற்று நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

?????????????????????

#TamilSchoolmychoice

இந்த விழாவில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பேசுகையில், ஆசியான் நாடுகள் அனைத்தையும் அதன் இனங்களையும் ஒருங்கிணைத்து பொருளாதார வல்லமையை பெருக்கி உலகுக்கு உணர்த்துவதே உண்மையான ஆசியான் என குறிப்பிட்டுள்ளார்.

ஆசியான் சமுகத்தை உருவாக்கும் திட்டம் நிறைவேறினால், அதுவே 2015-ஆம் ஆண்டின் ஆசியானின் வெற்றி என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.

என்றென்றும் இதுவே ஆசியானின் நிலை என்றும், ஆசியானில் உறுப்பியம் பெற்றுள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ஆசியானையும், ஆசியாவையும் வளப்படுத்த முன்வர வேண்டுமென நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வெளிநாட்டு முதலீடுகள் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் செல்வதை, ஆசியானுக்கு திருப்பி விட்டு இவ்வட்டாரம் பொருளாதார வல்லமையை அடைய அனைவரும் உழைக்க வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஆசியானின் வர்த்தகக் கட்டுப்பாடுகளை அகற்றினால், அதன் மூலம் இவ்வட்டாரத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை குறைய வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்ட நஜிப்,பொருள்கள் மற்றும் சேவை விநியோக முறையும், முதலீட்டுப் பெருக்கமும் உயரவேண்டும் என வலியுறுத்தினார்.

இதன் மூலம் பொருளாதாரம் பெருகும் போது, மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர வாய்ப்பிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்னும் 10 ஆண்டுகளில் இத்திட்டம் வெற்றியடைய இலக்கு குறிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இவ்வட்டாரத்தில் உள்ள குடியானவர்கள், வர்த்தகர்கள், ஹலால் பொருள் விற்பனையாளர்கள், மீனவர்கள், மின்னியல் பொறியாளர்கள் அனைவரும் ஆசியான் மக்கள் என்ற தாரக மந்திரத்தையே உச்சரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.