Home வாழ் நலம் ஒயின் குடித்தால் புற்றுநோயை கட்டுப்படுத்தலாம்!

ஒயின் குடித்தால் புற்றுநோயை கட்டுப்படுத்தலாம்!

1244
0
SHARE
Ad

wineஏப்ரல் 28 – தினமும் ஒயின் குடிப்பது நல்லதென மேல் நாட்டவர்கள் பலரும் நம்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள்.

அது கொடுக்கும் இன்பத்திற்காகக் குடிப்பவர்களே அதிகம். பெண்களும் இதில் அடங்குவர். உண்மையில் ஒயினின் மருத்துவ பயன்கள் பற்றி பல ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளன.

திராட்சை ரசம் எனப்படும் இது புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இருதயத்தைப் பாதுகாக்கிது. வயதாகும் போது ஏற்படும் மூளை மந்தமாவதைத் தடுக்கிறது. நீரிழிவு, மூட்டு வாதங்களைத் தடுக்கிறது என இப்படிப் பல ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

முக்கியமாக சிகப்பு ஒயின் (Red wine) அருந்தினால் மூளை நோய் குணமாகிறது. ஒயின் உடலிலுள்ள பெண் ஹோர்மோன் ஆன ஈஸ்ரோஜன் எனும் அமில அளவை அதிகரிப்பதால் மார்புப் புற்றுநோய் நல்லது.

wine.,ஒயின் உடல் எடை அதிகரித்து முகப்பொழிவுடன் ஆரோக்கிய வாழ்வை தருகிறது.  சிகப்பு ஒயின், நிறமற்ற ஒயினைவிட அதிக நன்மைகளைத் தருகிறதாம்.

காரணம் என்னவெனில் சிகப்பு ஒயின் உற்பத்தியின் போது திராட்சையின் தோல் நீண்ட நேரம் அகற்றப்படாது இருப்பதால் ரெஸவெடரோல் எனும் அமிலம் செறிவு அதிகமாக இருப்பதே ஆகும்.

ஆனால் நிறமற்ற ஒயின் உற்பத்தியின் போது புளிக்க விடும் முன்னரே திராட்சையின் தோல் அகற்றப்படுகிறது.  தினமும் ஒயின் அருந்துவராயின் தொடர்ந்து அருந்துவதில் தவறில்லை.

wine,,ஆனால் அளவோடு மட்டுமே. ஆண்கள் தினமும் இரண்டு டம்ளர்ரும்,பெண்கள் தினமும் ஒரு டம்ளரும் மட்டுமே ஒயின் அருந்தலாம்.

வழக்கமாக மது அருந்தாதவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக ஒயின் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் அவசியம் இல்லை.

ஒயின் உட்பட எந்த மதுவையும் குடிக்காதிருப்பது நிச்சயம் நல்லது. அதிலிருந்து பெறக் கூடிய ஒரு சில நல்ல பயன்களை ஏனைய உணவு வகைளிலிருந்து தாராளமாகப் பெறலாம்.