Home நாடு வான் அசிசாவுக்கு வாக்களித்து நீதியை நிலைநாட்டுங்கள் – அன்வார் கடிதம்

வான் அசிசாவுக்கு வாக்களித்து நீதியை நிலைநாட்டுங்கள் – அன்வார் கடிதம்

550
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 28 – பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் போட்டியிடும் பிகேஆர் தலைவர் டத்தோ வான் அசிசா வான் இஸ்மாயிலுக்கு அனைவரும் வாக்களிக்குமாறு அவரது கணவரும், பிகேஆர் ஆலோசகருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிறையில் இருந்தபடி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ANWAR IBRAHIM_INTERVIEW

ஓரினப்புணர்ச்சி வழக்கில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட அன்வார், தனது பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததை அடுத்து அத்தொகுதியில் வரும் மே 7-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice

அதில், பக்காத்தான் சார்பில் வான் அசிசா, தேசிய முன்னணி வேட்பாளர் சுஹைமி சாபுடின் உடன் நான்கு முனைப் போட்டியை எதிர்கொள்கிறார்.

இந்நிலையில், நேற்று வழக்கு ஒன்றிற்காக கோலாலம்பூர் ஷியாரியா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட அன்வார் இப்ராகிம், தனது ஆதரவாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்துள்ளார்.

அதில் “இன்ஷா அல்லா… நான் தண்டனையை எதிர்கொண்டு தொடர்ந்து போராடி வருகின்றேன்.. நாட்டில் பல  மோசமான கொடூரமான  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் மக்கள் மீது பொருட்கள் சேவை  வரியை திணித்து வருகின்றது”

“நீங்கள் வான் அசிசாவுக்கும், பக்காத்தானுக்கும் வாக்களித்து நீதியை நிலை நாட்டுவீர்கள் என்று நம்புகின்றேன்” என்று அன்வார் குறிபிட்டுள்ளார்.