Home உலகம் பாலி 9 மரண தண்டனை: துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு துடிதுடித்த குடும்பத்தினர்!

பாலி 9 மரண தண்டனை: துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு துடிதுடித்த குடும்பத்தினர்!

921
0
SHARE
Ad

நூஸா கம்பாங்கன், ஏப்ரல் 29 – நேற்று நள்ளிரவில் ‘பாலி 9’ வழக்கில் ஆஸ்திரேலிய பிரஜைகளான மயூரன் சுகுமாறன் மற்றும் ஆண்ட்ரு சான் உட்பட 8 பேருக்கும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றிய போது துப்பாக்கிச் சத்தத்தை அவர்களின் குடும்பத்தினரும் கேட்கும் துரதிருஷ்டமான நிலை ஏற்பட்டுள்ளது.

014588-47e503ea-edc5-11e4-a82d-68ff75e6542c

நூஸா கம்பாங்கன் தீவில் தண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்கு எதிர் திசையில் வெகு தொலைவில் குடும்பத்தினர்கள் காத்திருக்கும் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் தண்டனை நிறைவேற்றப்பட்ட போது அவர்களால் அந்த துப்பாக்கிச் சத்தத்தை கேட்க முடிந்தது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

இதனால் குடும்பத்தினர்கள் தங்கள் அன்பு உறவுகள் சுடப்படுவதைக் கேட்டு துடிதுடித்துப் போனதாகவும் அங்கிருந்த ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கொல்லப்பட்டவர்களில் மயூரன் சுகுமாறனின் குடும்பம், இந்தோனேசியரான சைனல் அபிடின் குடும்பம் மற்றும் நைஜீரியர்களின் குடும்பம் ஆகியோர் கூடாரங்களில் காத்திருக்காமல் சிலகாப் பகுதியில் இருந்த தங்கும்விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

தங்களுக்கு ஏற்பட்ட இந்த துயரம் வேறு எந்த குடும்பத்திற்கு ஏற்படக் கூடாது என்று கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர்கள் கதறி வருகின்றனர்.

இந்தோனேசியாவின் கருணை காட்டாத இந்த செயலுக்கு ஆஸ்திரேலியா மற்றும் உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.