Home இந்தியா ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ஓட்ட வித்தியாசத்தில் கொல்கத்தா அணியைத் தோற்கடித்தது!

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ஓட்ட வித்தியாசத்தில் கொல்கத்தா அணியைத் தோற்கடித்தது!

665
0
SHARE
Ad

Chennai Super Kings Logo with Dhoniசென்னை, ஏப்ரல் 29 – பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் கொல்கத்தா அணி பந்து வீச்சைத் தொடக்கியது, 20 ஓவர்கள் முடிவடைந்தபோது சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில், கொல்கத்தா அணி 135 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது.

#TamilSchoolmychoice

ஆனாலும், 20 ஓவர்கள் முடிவடைந்தபோது, 9 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை மட்டுமே கொல்கத்தா அணி எடுக்க முடிந்தது. இருப்பினும் இறுதியில் மிக பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரண்டே ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி வாகை சூடியது.

Kolkata-Knight-Riders-Logo

இன்று பெங்களூரில் நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல் அணியும் விளையாடுகின்றன.