முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர். திரைக்கதை, வசனத்தை ராஜேஷ்குமார் எழுத, கதை எழுதி இயக்குகிறார்கள் இரட்டையர்களான வி.ஆர்.காளிதாஸ், வி.அகஸ்டின்.
செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் மானிதாபமின்றி, துன்புறுத்தி, உடல் உறுப்புகளை சிதைத்து கொன்ற கொடூரத்தின் பின்னணி என்ன? என்ற உண்மை சம்பவத்தை வெளிப்படுத்தவே இப்படம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பு மேற்பார்வை – ஜோதிமணி, ராஜசேகர், ராஜ்குமார். சம்பவம் நடைபெற்ற பகுதிகளிலேயே படப்பிடிப்புகள் நடந்துவருகிறது. விரைவில் நடிகர்கள் பற்றி அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.