Home படிக்க வேண்டும் 3 ஆப்பிள் ஐ-போன் விற்பனையை முந்தியது சாம்சுங் எஸ்-6!

ஆப்பிள் ஐ-போன் விற்பனையை முந்தியது சாம்சுங் எஸ்-6!

816
0
SHARE
Ad

s6_2390245fவாஷிங்டன், ஏப்ரல் 30 – ஸ்மார்ட்போன் எனப்படும் திறன்பேசிகள் உற்பத்தியில் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளை சாம்சுங் தயாரிப்புகள் முந்தி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திறன்பேசிகள் உற்பத்தியில் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளே முதலிடத்தை வகித்து வந்தன.

ஆனால் தற்போது கொரியாவைச் சேர்ந்த சாம்சுங் தயாரிப்புகளின் கேலக்சி எஸ்6 என்ற ரக திறன்பேசிகளின் வரவு ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளை பின்னுக்குத் தள்ளிவிட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சாம்சுங் நிறுவனத்தின் லாபம் தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக அதிகரித்து வந்துள்ளது. மூன்றாம் காலாண்டில் நிறுவன லாபம் அதிகரித்ததற்கு அந்நிறுவனத்தின் கேலக்சி எஸ்-6 பெருமளவில் விற்பனையானதும் ஒரு காரணமாகும்.

#TamilSchoolmychoice

திறன் பேசிகள் விற்பனையில் தொடர்ந்து சரிவு நிலையைச் சந்தித்து வந்த சாம்சுங் நிறுவனம், புதிய வடிவமைப்பு, தயாரிப்புக்காகக் காத்திருந்தது.

அவ்விதம் காத்திருந்து வெளியிட்ட எஸ்-6 வருகையால் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்ததோடு லாபமும் உயர்ந்தது.

எதிர்பார்ப்பையும் மீறி கேலக்சி எஸ்-6 விற்பனை உள்ளதாக நிறுவனத்தின் துணைத் தலைவர் பார்க் ஜின்-யங் குறிப்பிட்டுள்ளார்.

கேலக்ஸி எஸ்6 விற்பனை தொடர்பாக பங்குதாரர்களிடையே நம்பிக்கை உருவாகாததால் சாம்சுங் நிறுவனப் பங்குகள் சமீபகாலமாக இறங்குமுகத்தை சந்தித்தன.

முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவித்த கருத்துகளோடு எஸ்-6 விற்பனை அதிகரித்ததும் படிப்படியாக சாம்சுங் பங்குகளின் விலை உயர்வுக்கு வழியேற்படுத்தியுள்ளது.