திரிஷா – வருண் மனியம் திருமணம் கடந்த வாரம் நின்றது. ஆனால் திரிஷாவோ இதுபற்றி கவலைப்படாமல், புதுப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.
தமிழில் எந்த முன்னணி நடிகைக்கும் வராத அளவுக்கு பெரிய வாய்ப்புகள் அவருக்கு வருகின்றன. திரிஷா – வருண் மனியம் திருமண ரத்தை திரிஷாவின் அம்மாவும் உறுதிப்படுத்திவிட்டார்.
விருப்பமில்லாத திருமணத்தைச் செய்து கொண்டு எதற்காக மனம் வருந்த வேண்டும்? என்று திரிஷாவின் அம்மா கேட்டிருந்தார். இந்த நிலையில், இதுவரை அமைதியாக இருந்த திரிஷா, திருமணம் ரத்தானதை வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளார்.
“போதும் விட்டுவிடுங்கள். தனியாக இருப்பதில் சந்தோஷமாக இருக்கிறேன். நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார். திருமண ரத்து குறித்து முதல் முறையாக திரிஷா ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.