Home நாடு மஇகா வழக்கு குறித்த விளக்கம்: மதியம் செய்தியாளர்களை சந்திக்கிறார் சரவணன்!

மஇகா வழக்கு குறித்த விளக்கம்: மதியம் செய்தியாளர்களை சந்திக்கிறார் சரவணன்!

395
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 13 – 2009 மத்திய செயலவை செயல்படுவதற்கும், சங்கப் பதிவகத்தின் உத்தரவுகள் அமுலாக்கப்படுவதற்கும் இடைக்காலத் தடை விதித்து நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன.

m.saravanan1-may7

எதிர்வரும் மே 27-ம் தேதி வரை தான் இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதால், 2013 மத்திய செயலவை செயல்பட அனுமதியில்லை என அக்கட்சியைச் சேர்ந்த சில தரப்பினர் கூறிவருகின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் மே 27ஆம் தேதி தான் அறிவிக்கவிருப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எனினும், 2013-ஆம் ஆண்டு மத்திய செயலவை இனி மத்திய செயலவைக் கூட்டத்தை நடத்துவது உட்பட தனது நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என மஇகா கிளைத்தலைவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அறிவித்துள்ளார்.

இந்த குழப்பங்களை கருத்தில் கொண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து விளக்கமளிக்க மஇகா தேசிய உதவித் தலைவரும், துணை விளையாட்டுத்துறை அமைச்சருமான டத்தோ எம்.சரவணன் இன்று மதியம் 12 மணியளவில் மஇகா தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.