Home நாடு நிழல் அமைச்சரவையில் இடம் தேவையில்லை – ஹாடி அவாங்

நிழல் அமைச்சரவையில் இடம் தேவையில்லை – ஹாடி அவாங்

411
0
SHARE
Ad

hadi awang 300-200கோலாலம்பூர், மே 20 – பக்காத்தான் கூட்டணி சார்பாக அறிவிக்கப்பட உள்ள நிழல் அமைச்சரவையில் தனது பெயரை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதை மட்டுமே தனது மனம் மிக ஆழமாக விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

“நிழல் அமைச்சரவை என்பது ஒரு விவகாரம் அல்ல. அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதும் அந்த வெற்றியை எவ்வாறு பெறப் போகிறோம் என்பதும் தான் முக்கியம். மாறாக நிழல் அமைச்சரவைக்கு யார் யார் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதல்ல,” என்றார் ஹாடி அவாங்.

#TamilSchoolmychoice

மற்ற அனைத்து விவகாரங்களையும் விட புத்ரா ஜெயாவை வெற்றி கொள்வது என்பது தான் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள அவர், பக்காத்தான் கூட்டணி இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் நிழல் அமைச்சரவை ஒன்று அமைக்கப்படும் என நேற்று எதிர்க்கட்சித் தலைவரும் பிகேஆர் தலைவருமான டத்தோஸ்ரீ வான் அசிசா அறிவித்திருந்தார்.

அதே வேளையில், ஹாடியுடன் இணைந்து செயல்பட முடியாது என்று ஜசெக கட்சியும் அறிவித்திருந்தது.

இது குறித்து கருத்து கேட்டபோது ஹாடி அவாங் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.