ஜெயலலிதா முதலமைச்சராக மீண்டும் பதவி ஏற்றவுடன், ஐந்து புதிய திட்டங்களை தொடங்கும் கோப்புகளில் கையெழுத்திட்டார். இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊழலுக்கான தண்டனையால் ஜெயலலிதா இரண்டாவது முறையாக பதவி இழந்தார். நீதியே வெல்லும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், எல்லோருக்கும் ஏமாற்றம் அளிக்கும் வகையில், மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.”
“தன் மீதான கரைகளை போக்குவதற்காக பல்வேறு வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகிறார். இது போன்ற பல அறிவிப்புகளை அவர் கடந்த சில வருடங்களில் வெளியிட்டுள்ளார்”
“ஊழல், அதிகார துஷ்பிரயோகம் போன்ற செயல்களால் இந்த அதிமுக ஆட்சி அலங்கோலத்தின் உச்சமாக உள்ளது. ஒருவர் எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்றிக்கொண்டே இருக்க முடியாது. அதிகார மமதையில் இருக்கும் ஜெயலலிதா, இது புரியாமல் தமிழக மக்களை வெற்று அறிவிப்பின் மூலம் ஏமாற்ற நினைக்கிறார். அவரின் பகல் கனவு ஒருநாளும் பலிக்காது” என்று அவர் தெரிவித்துள்ளார்.