Home மலேசியா தொலைதூர வழித்தடங்களை குறைத்துக் கொள்ளும் முடிவில் மாஸ்!

தொலைதூர வழித்தடங்களை குறைத்துக் கொள்ளும் முடிவில் மாஸ்!

627
0
SHARE
Ad

Liow-Tiong-Lai-2கோலாலம்பூர், மே 26 – மாஸ் நிறுவனத்தின் புதிய நிர்வாகம் நெடுந்தூர விமான தடங்களை குறைத்துக் கொண்டு நடுத்தர விமான பாதைகளில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இதன் எதிரொலியாக, வெகுவிரைவில் மேற்கத்திய நாடுகளின் வழித்தடங்கள் சிலவற்றில் மாஸ் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்ற அறிவிப்புகள் வெளியாகலாம். மேலும், மாஸ் நிறுவனம் நடுத்தர விமான பாதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளதால், தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடைநிலை மைய விமான நிறுவனமாக மாற வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் கூறுகையில், “ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்ய விரும்புவோர், கோலாலம்பூரை தான் இடைநிலை மையமாக வைத்து பயணம் செய்கின்றனர். இதனை மாஸ் நிறுவனம் மிகச் சரியான அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”

“மாஸின் புதிய நிர்வாகம்,  நடுத்தர விமான பாதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளது மிகச் சரியான முடிவு.மாஸ் ‘ஒன் வேர்ல்ட் அலையன்ஸ்’ (One World Alliance) உரிமத்தைப் பயன்படுத்தி இடைநிலை மயமாக மாறும் வாய்ப்புகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.”

#TamilSchoolmychoice

“நெடுந்தொலைவு விமானப் பாதைகளை மாஸ் நிறுத்திக் கொள்ள நினைத்தால் அந்த வாய்ப்புகள் ஏர் ஏசியா மற்றும் மலிண்டோ நிறுவனங்களுக்கு வழங்கப்படும். டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் மாஸ் விமானங்களுக்கான தரையிறங்கும் உரிமம் கோரப்பட்டுள்ளது. எனினும், மற்ற விமான சேவைகளின் நெருக்கடி காரணமாக ஜப்பான் அரசு அது பற்றி யோசித்து வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மாஸில் பணியாளர்கள் நீக்கம் பற்றி அமைச்சர் கூறுகையில், “மாஸ் பணியாளர்கள் 8000 பேர் நீக்கப்படுவரா அல்லது 6000 பேர் நீக்கப்படுவாரா என்பது எனக்கு தெரியாது. எனினும், மீள் நடவடிக்கைகளில் மாஸ் நிர்வாகம் உறுதியாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.