Home தொழில் நுட்பம் மிகுந்த ஆபத்தான 6 நாள் பயணத்திற்கு தயாராகும் சூரிய சக்தி விமானம்!

மிகுந்த ஆபத்தான 6 நாள் பயணத்திற்கு தயாராகும் சூரிய சக்தி விமானம்!

561
0
SHARE
Ad

solar-impulseபெய்ஜிங், மே 26 – உலகின் முதல் சூரிய சக்தி விமானமான ‘சோலார் இம்பல்ஸ் 2’ (Solar Impulse 2) தனது சாகசப் பயணத்தின் மிகுந்த ஆபத்தான சீனா-மத்திய பசிபிக் பகுதியை நோக்கிய பயணத்தை விரைவில் தொடங்க இருப்பதாக அந்த விமானத்தின் குழு சமீபத்தில் அறிவித்து இருந்தது. எனினும், மோசமான வானிலை காரணமாக இந்த பயணம் தாமதமாகிறது என விமானிகள் நேற்று அறிவித்தனர்.

முழுக்க முழுக்க சூரிய ஒளியில் இயங்கும் விமானம், தனது முதல் உலக சுற்றுப் பயணத்தை கடந்த மார்ச் மாதம் அபுதாபியில் தொடங்கியது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெர்ட்ரண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் ஆகிய இருவரும் வடிவமைத்துள்ள இந்த விமானத்தை வர்த்தக பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவே இந்த உலகப் பயணம் தொடங்கப்பட்டது.

ஏறத்தாழ 5 மாதங்கள் சூரிய ஒளியைக் கொண்டே உலகை சுற்றவுள்ள இந்த விமானம், சுமார் 22,000 மைல் தூரத்தை தனது பயணத்தில் கடக்க இருக்கிறது. கடந்த சில வாரங்களாக சீனாவில் நிறுத்தப்பட்டுள்ள இந்த விமானம், மிக விரைவில் மிகுந்த ஆபத்தான சீனா-மத்திய பசிபிக் பகுதி பயணத்தை தொடங்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த விமானத்தின் விமானியான ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

சாதாரண விமானத்தில் இந்த பயணத்தை வெறும் 10 மணி நேரங்களில் கடந்துவிடலாம். எனினும் சூரிய சக்தி விமானம் மூலம் இந்த பாதையை கடக்க ஆறு நாட்களாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பாதையில் வானிலை தொடர்ந்து மோசமாகி வருவதால் இந்த சமயத்தில் விமானத்தை இயக்குவது சரியான முடிவாக இருக்காது என கூறப்பட்டது.  அதனை ஏற்ற போர்ஷ்பெர்க், தனது பயணத்தை தாமதப்படுத்தி உள்ளார்.

இந்த பயணம் குறித்து  போர்ஷ்பெர்க் கூறுகையில், “ஆறு நாட்கள் தனியாக மேற்கொள்ள இருக்கும் இந்த பயணம் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கப்போகிறது. சாகசம் நிறைந்த இந்த பயணத்தை நான் எதிர்நோக்கி உள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.