Home இந்தியா ஜெயலலிதா ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்திருக்க்க வேண்டும் – சுப்பிரமணியன் சுவாமி!

ஜெயலலிதா ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்திருக்க்க வேண்டும் – சுப்பிரமணியன் சுவாமி!

561
0
SHARE
Ad

subramani_swamy.gifபுதுடெல்லி, மே 27 – ஜெயலலிதா தமது ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, அவர் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து கர்நாடகா அரசு எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக திமுக அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். அவர் இதுபற்றி கூறுகையில்;

“இந்த விஷயத்தில் கர்நாடக அரசின் முடிவுக்காக வரும் ஜீன் 1-ஆம் தேதி வரை காத்திருக்கப் போவதாகவும், அதன் பிறகு மேல்முறையீடு செய்வது குறித்து தான் முடிவு செய்ய இருப்பதாகவும்” கூறியுள்ளார்.

இதனிடையே , சுப்பிரமணியன் சுவாமி தமது டுவிட்டர் பக்கத்தில், “தனியார் தொலைக்காட்சி இணையதளத்தில் சீனிவாசன் ஜெயின், ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சரமாரியாக விமர்சித்துள்ளார். “ஜெயலலிதா உங்கள் ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்து கொள்ளூங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.