Home கலை உலகம் சல்மான் கான் துபாய் செல்ல மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி!

சல்மான் கான் துபாய் செல்ல மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி!

519
0
SHARE
Ad

shalman khanமும்பை, மே 27 – துபாய் செல்ல நடிகர் சல்மான்கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 2002-மாம் ஆண்டு குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.

இந்த வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 6-ஆம் தேதி மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி சல்மான்கானுக்கு கீழ்நீதிமன்றம் விதித்த தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததோடு, அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கியது.

அதில், சல்மான்கான் இந்தியாவை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றால், உயர்நீதிமன்றத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையும் இடம் பெற்று இருந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், வரும் 29-ஆம் தேதி துபாயில் நடைபெறும் “இந்திய-அரபு பாலிவுட் சினிமா விருது” விழாவில் கலந்து கொள்ளும் வகையில் 27-ஆம் தேதி (இன்று) முதல் 30-ஆம் தேதி வரை அங்கு செல்ல அனுமதி அளிக்க கோரி நடிகர் சல்மான்கான் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஷாலினி பன்சால்கர், நடிகர் சல்மான் கான் துபாய் நாட்டுக்கு செல்லும் போதும், அங்கிருந்து புறப்படும் போதும் அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும் துபாய் சென்று வரும் முழு விவரம், விமான நேரம், விமானத்தின் எண், துபாயில் தங்கி இருக்கும் இடத்தின் முகவரி, செல்பேசி எண் ஆகியவற்றை விசாரணை குழுவினரிடம் அளிக்கவேண்டும்.

மேற்கண்டவை உள்பட அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பின்பற்ற தயாராக இருந்தால் துபாய் செல்ல அனுமதிப்பதாக கூறினார்.

வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதால் மேலும் ரூ.2 லட்சம் பிணைத் தொகையை விசாரணை நடைபெற்ற நீதிமன்றத்தில் செலுத்துமாறும் சல்மான்கானுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.