Home உலகம் பாகிஸ்தானில் மீண்டும் பேருந்தின் மீது தாக்குதல் – 21 பேர் பலி!

பாகிஸ்தானில் மீண்டும் பேருந்தின் மீது தாக்குதல் – 21 பேர் பலி!

594
0
SHARE
Ad

pakகுவேட்டா, மே 31 – பாகிஸ்தானில் பயணிகள் பேருந்தின் மீது பாதுகாப்பு அதிகாரிகள் போல் உடை அணிந்து வந்த தீவிரவாதிகள் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டத்தில் 21 பேர் பலியாகினர், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் இருந்து கராச்சிக்கு நேற்றுமுன்தினம் நள்ளிரவு சென்ற 2 பயணிகள் பேருந்தை, மஸ்தாங் என்ற இடத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். பேருந்திற்குள் வந்த அவர்கள், திடீரென பயணிகளை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். இதில் 21 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்பின்னர் பலியான பயணிகளின் உடல்களை தீவிரவாதிகள் அங்குள்ள மலைப்பகுதியில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு இயக்கமும் பொறுப்பேற்க வில்லை என்றாலும், பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். படுகாயமடைந்த பலர் மீட்புக் குழுவினரால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

கடந்த சில வாரங்களுக்கு முன்பும் கராச்சியில் பயணிகள் பேருந்தின் மீது இருசக்கரவாகனத்தில் வந்த தீவிரவாதிகள் பயணிகளை நோக்கி கொடூரமான முறையில் நடத்திய தாக்குதலில் 43 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. அதனால் இந்த சம்பவத்திற்கும் ஐஎஸ் இயக்கம் காரணமாக இருக்கலாம் என விசாரிக்கப்பட்டு வருகிறது.