Home நாடு நஜிப் பதவி விலகுவதால் பிரச்சினைகள் தீராது: துங்கு ரசாலி

நஜிப் பதவி விலகுவதால் பிரச்சினைகள் தீராது: துங்கு ரசாலி

947
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 30 – டத்தோஸ்ரீ  நஜிப் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதால் அம்னோ காப்பாற்றப்பட்டுவிடாது என்றும் பிரச்சினைகள் தீராது என்றும் அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா (படம்) தெரிவித்துள்ளார்.

Tengku-Razaleighஇதற்கு முன்பு துன் மகாதீர், துன் அப்துல்லா படாவி ஆகியோர் பிரதமர் பதவியிலிருந்து விலகியபோதிலும், அதனால் எந்தவிதத் தீர்வும் ஏற்படவில்லை என்றும் குவா மூசாங் (கிளந்தான்) நாடாளுமன்ற உறுப்பினருமான ரசாலி மேலும் கூறியுள்ளார்.

நஜிப்பின் பதவி விலகல், நாடு மற்றும் கட்சி தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்க்கும் என கூறப்படும் நிலையில், முன்பு டாக்டர் மகாதீரின் ராஜினாமா எத்தகைய பிரச்சினைகளையும் தீர்க்கவில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

“இதேபோல் டாக்டர் மகாதீரிடமிருந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அப்துல்லா படாவியும், பின்னர் பிரச்சினைக்குரியவராக கருதப்பட்டு பதவியிலிருந்து விலக நிர்பந்திக்கப்பட்டார். தற்போது அதிகமான பிரச்சினைகள் உள்ளன,” என்று துங்கு ரசாலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அம்னோவில் பல்வேறு பிரச்சினைகள் நிலவுவதாக குறிப்பிட்ட அவர், அக்கட்சியால் இனிமேலும் இளைய தலைமுறையினரை ஈர்க்க முடியவில்லை என்றார்.

மேலும் நாட்டின் பிரதமரை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தற்போதுள்ள நடைமுறை பயனுள்ளதாக இல்லை என்று கூறினார்.

“எனவே இது குறித்து மறு ஆய்வு தேவை என்றும், தேர்வு செய்யப்பட்ட பிரதமர் தேவை என்றும் கருதுகிறேன். மாறாக ஒரு கட்சியால் முன்னிறுத்தப்பட்டவர் தற்போது பிரதமர் ஆகிறார். மக்களும் ஜனநாயகத்தில் பங்கேற்கட்டும்,” என்று துங்கு ரசாலி மேலும் தெரிவித்தார்.