Home உலகம் மோடியை பிடித்துக் கொடுத்தால் 100 கோடி – பாகிஸ்தான் கட்சி பகிரங்க அறிவிப்பு!

மோடியை பிடித்துக் கொடுத்தால் 100 கோடி – பாகிஸ்தான் கட்சி பகிரங்க அறிவிப்பு!

606
0
SHARE
Ad

modiஇஸ்லாமாபாத், ஜூன் 4 – இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பிடித்து கொடுத்தால் 100 கோடி ரூபாய் பரிசு அளிக்கத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் நாட்டின் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை அக்கட்சியின் தலைவர் சிராஜ்-உல்-ஹக் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள ரவல்காட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் சிராஜ்-உல்-ஹக் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், ”ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் ஜலாகுதீன் போன்ற ஜிகாத் தலைவர்களை கைது செய்ய இந்தியா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதுபோன்ற முயற்சிகளுக்கு ஒருபோதும் வெற்றி கிடைக்காது. ஜலாகுதீன் தலைக்கு இந்தியா 50 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.”

“ஆனால் நான் கூறுகிறேன் நரேந்திர மோடியை பிடித்துக் கொடுத்தால் நாங்கள் 100 கோடி ரூபாயை தர தயாராக உள்ளோம். காஷ்மீரிலும், குஜராத்திலும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கு முக்கியக் காரணம் மோடி தான். இது பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.”

#TamilSchoolmychoice

“காஷ்மீர் என்பது பாகிஸ்தானின் ஒரு பகுதி. அதை மறந்து விட்டு எந்த பாகிஸ்தான் அரசியல்வாதியாவது இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டால், அவர்கள் பாகிஸ்தானியர்களுக்கும், காஷ்மீருக்கும் துரோகிகளாக எண்ணப்படுவார்கள். காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்த பிறகுதான் நட்பு பற்றி பேச வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.