Home இந்தியா காஷ்மீரை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது:பாகிஸ்தான் தளபதி குதர்க்கம்

காஷ்மீரை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது:பாகிஸ்தான் தளபதி குதர்க்கம்

538
0
SHARE
Ad

Raheel-Sharifஇஸ்லாமாபாத், ஜூன் 4- காஷ்மீரை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது தீர்க்கப்படாத பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை.இன்னும் எத்தனை காலம் ஆனாலும் பாகிஸ்தானும் காஷ்மீரும் பிரிக்க முடியாத ஒன்றாகும்.

பாகிஸ்தான் தலை நகர் இஸ்லாமாபாத்தின் தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரீப் இவ்வாறு குதர்க்கமாகப் பேசியுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது:

#TamilSchoolmychoice

எல்லையில் அமைதி, நிலைத்தன்மை நிலவ வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். எனவே, ஐ.நா.சபையின் தீர்மானத்தின் அடிப்படையில் காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். அப்போது தான் காஷ்மீர் மக்களின் ஆசைகள், எதிர்பார்ப்புகள் நிறைவேறி இப்பிராந்தியத்தில் அமைதி ஏற்படும்.

எதிர்காலத்தில் போர் ஏற்பட்டால் இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில்  நிச்சயம் மாற்றம் ஏற்படும். எந்த விதமான தாக்குதலையும் சமாளிக்கும் திறன் எங்களுக்கு உண்டு.

நம் எதிரிகள் நாட்டில் தீவிரவாதத்தைத் தூண்டிவிட்டு மோதலை உருவாக்கி நாட்டைச் சீர்குலைக்க முயற்சித்து வருகின்றனர். இது போன்ற சதித் திட்டங்களை  முறியடிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

பாகிஸ்தானில் பயங்கரவாதம் ஏற்பட இந்திய உளவு அமைப்பான ‘ரா’ தான் காரணம் எனப் பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், பாகிஸ்தானின் ராணுவ தளபதி இவ்வாறு பேசியுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.