Home தொழில் நுட்பம் ‘போட்டி தாங்க முடியல’ – மேப்ஸ் உட்பட பல சேவைகளை நிறுத்துகிறது யாஹூ!

‘போட்டி தாங்க முடியல’ – மேப்ஸ் உட்பட பல சேவைகளை நிறுத்துகிறது யாஹூ!

601
0
SHARE
Ad

yahooகலிபோர்னியா, ஜூன் 6 – பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ‘யாஹூ’ (Yahoo), தனது ‘மேப்ஸ்’ (Maps) உள்ளிட்ட பல சேவைகளை இந்த மாத இறுதியுடன் நிறுத்திக் கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பினை யாஹூ நிறுவனத்தின் முக்கிய அதிகாரி அமோட்ஸ் மைமொன் நேற்று தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஆரம்பக் காலங்களில் கூகுள் நிறுவனத்திற்கு கடும் போட்டி அளிக்கும் நிறுவனமாக யாஹூ பார்க்கப்பட்டு வந்தாலும், அடுத்த சில வருடங்களில் கூகுள் தனக்கென புதிய பாதையை தீர்மானித்துக் கொண்டு போட்டியிட முடியாத தொலைவிற்கு சென்றுவிட்டது. கூகுளை பின்தொடர்ந்து வந்த யாஹூவால் நிர்வாக காரணங்களால் ஏனோ பெரிய அளவிலான வெற்றியை பெற முடியவில்லை.

இந்நிலையில் தான், அந்நிறுவனம் இணைய ‘தேடல்’ (search) மற்றும் ‘டிஜிட்டல் கண்டென்ட்’ (Digital Content) ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட முடிவு செய்து மற்ற சேவைகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து அமோட்ஸ் மைமொன் கூறுகையில், “மேப்ஸ் உள்ளிட்ட சேவைகளில் கூகுள் போன்ற நிறுவனங்களின் ஆதிக்கம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதன் காரணமாக Maps.yahoo.com தளத்தின் சேவையை நிறுத்திக் கொண்டு மற்ற துறைகளில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

யாஹூ தலைமை நிர்வாகி மரிஸ்சா மேயர் எடுத்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவு, யாஹூவின் அடுத்த நடவடிக்கைகளுக்கு அச்சாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.