Home Featured தொழில் நுட்பம் ஜிமெயிலை ஓரங்கட்டிய யாஹூவின் புதிய செயலி!

ஜிமெயிலை ஓரங்கட்டிய யாஹூவின் புதிய செயலி!

1035
0
SHARE
Ad

yahooapp_newகோலாலம்பூர் – எப்படியும் மீண்டு எழ வேண்டும் என்ற உறுதியுடன் யாஹூ தனது மெயில் சேவையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி, தனது செயலிக்கு மறுவடிவம் கொடுத்து பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த புதிய யாஹூ மெயில் செயலியில், கடவுச்சொல்லை நினைவில் வைத்திருக்கத் தேவையில்லை, ஜிமெயில் உட்பட அனைத்து மின்னஞ்சல் கணக்குகளையும் நிர்வகித்துக் கொள்ளலாம். இப்படி பல்வேறு அம்சங்கள் மூலம் மீண்டும் ஆட்டத்திற்கு வந்துள்ளது யாஹூ.

கடவுச்சொல்லிற்கு மாற்று வழி

இரண்டிற்கும் மேற்பட்ட மின்னஞ்சல் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கடவுச்சொற்களை நினைவில் வைத்துக் கொள்வது சற்றே சிரமம் தான். தொடர்ச்சியாக 10 நாட்கள் ஒரு கணக்கை பயன்படுத்தவில்லை என்றாலும் பலருக்கு கடவுச் சொல் மறந்து போய்விடும். மீண்டும் அதனை மீட்க வேண்டும். இதனை உணர்ந்துள்ள யாஹூ, ஒரு சரியான தீர்வை கண்டறிந்துள்ளது.

#TamilSchoolmychoice

மின்னஞ்சல் கணக்குகளை நாம் பயன்படும் செல்பேசி எண்களுடன் இணைத்துள்ள யாஹூ, அதன் மூலம் கணக்குகளை திறப்பதற்கு தேவையான வழிமுறைகளை செய்துள்ளது.

yahooஜிமெயிலையும் நிர்வகிக்கலாம்

பயனர்கள் ஜிமெயில், அவுட்லுக் உட்பட பல்வேறு மின்னஞ்சல் கணக்குகளை வைத்திருப்பதால் அவை அனைத்தையும் மொத்தமாக யாஹூமெயில் செயலியிலேயே கையாள்வதற்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அவற்றிற்கான செட்டிங்ஸ் வழிமுறைகளும் மிக எளிமையாக உள்ளது (காணொளி).

இந்த செட்டிங்ஸ்-ஐ பயனர்கள் யாஹூ கணக்குகளில் மேம்படுத்தினால், அந்தந்த கணக்குகளுக்கான ‘இன்பாக்ஸ்’ (inbox), புகைப்படத் தொகுப்புகள் என அனைத்தும் வந்துவிடும்.

ஒட்டுமொத்தமாக பார்க்கையில் புதிய யாஹூ மெயில் செயலி, பயனர்களுக்கு கண்டிப்பாக புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

https://www.youtube.com/watch?v=g9z-lp4utOM