Home Featured நாடு 1எம்டிபிக்கு எதிராக காவல்துறையில் புகாரா? மறுக்கிறார் மொகிதின்‏

1எம்டிபிக்கு எதிராக காவல்துறையில் புகாரா? மறுக்கிறார் மொகிதின்‏

586
0
SHARE
Ad

Tan-Sri-Muhyiddin-Yassinகோலாலம்பூர் – அம்னோ துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் 1எம்டிபிக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாக வாட்ஸ் அப் வழி பரவி வரும் தகவலை, அவரது முகநூல் பக்கத்தை நிர்வகித்து வருபவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இத்தகைய தகவல் முற்றிலும் பொய்யானது என அந்நிர்வாகி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் துன் மகாதீர், நாடாளுன்ற உறுப்பினர் ஷாபி அப்டால் ஆகியோருடன் டான்ஸ்ரீ மொகிதினும் 1எம்டிபிக்கு எதிராக வெவ்வேறு பகுதிகளில், தனித்தனியே காவல் துறையில் புகார் அளிக்கப் போவதாக அந்த வாட்ஸ் அப் தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

மொகிதின் யாசின் டாங் வாங்கியிலும், மகாதீர் புத்ரா ஜெயாவிலும், ஷாபி அப்டால் பிரிக்பீல்ட்சிலும் அமைந்துள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இத்தகவல் அறவே பொய்யானது என மொகிதின் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இச்செய்தி தொடர்பான பரபரப்பானது மெல்ல அடங்கத் தொடங்கியுள்ளது.