Home இந்தியா தொலைபேசி ஒட்டுக் கேட்பு: ஆந்திரா- தெலுங்கானா முதல்வர்கள் மோதல் முற்றுகிறது!

தொலைபேசி ஒட்டுக் கேட்பு: ஆந்திரா- தெலுங்கானா முதல்வர்கள் மோதல் முற்றுகிறது!

717
0
SHARE
Ad

srஐதராபாத், ஜூன் 10- தெலுங்கானா மேலவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களிக்குமாறு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி  சட்டமன்ற உறுப்பினருக்கு  ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தெலுங்கு தேசம் கட்சி  சட்டமன்ற உறுப்பினர் ரேவந்த் ரெட்டியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்து, முன்பணமாகக் கொடுக்கப்பட்ட லஞ்சப்பணம் ரூ.5 லட்சத்தையும் கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இவ்விவகாரத்தில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தினர். மேலும் அவர்களின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த லஞ்ச விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குத் தொடர்பு இருப்பதாகத் தெலுங்கானா மாநில அரசு குற்றம் சாட்டியது.

#TamilSchoolmychoice

சந்திரபாபு நாயுடு, மேலவைத் தேர்தலில் தனது கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி பேசிய பேச்சுகளைத்  தெலங்கானாவில் உள்ள தொலைக்காட்சி ஒளிபரப் பியது. இதனால் இந்தப் பிரச்சினை பெரிதாக வெடித்தது.

நேற்று முன் தினம் குண்டூர் மங்களகிரி பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் ஓராண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். தொலைபேசியை  ஒட்டுக் கேட்பது சட்டவிரோதமான செயல் என்றும் குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலடி கொடுத்த தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் “பிரம்மனாலும் சந்திரபாபு நாயுடுவைக் காப்பாற்ற முடியாது” எனக் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் நேற்றுக் காலை ஐதராபாத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் நடை பெற்றது.

இதில் தெலுங்கானா அரசு இதுவரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட அமைச்சர்கள்,நாடாளு மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முதலான 120 பேரின் பேச்சுக்களை ஒட்டுக் கேட்டதாகக் குற்ற்ம் சுமத்தப்பட்டது. மேலும், மத்திய அரசிடம் இதுகுறித்து முறையிடவும் முடிவு செய்யப்பட்டது.

இதனைத்  தொடர்ந்து நேற்று மாலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் இன்று காலை பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து இது குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.

இதனிடையே வரும் 12-ம் தேதி தெலுங்கானா முதல்வர் கே.சந்திர சேகர ராவும்  இது குறித்துப் புகார் தெரிவிக்க டெல்லி செல்ல உள்ளார்.

இப்படியாக, ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர்களுக்கு இடையிலான மோதல் முற்றுகிறது.