நோன்புப் பெருநாளுக்குத் தயாராவதற்கு வசதியாக, இந்த சிறப்பு உதவித்தொகை வரும் ஜூன் 25-ம் தேதி வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
அதோடு, 700,000 அரசாங்க ஓய்வூதியம் பெறுவோர், தலா 250 ரிங்கிட் சிறப்பு உதவித்தொகையைப் பெறுவார்கள் என்றும் இன்று நடைபெற்ற 14 வது அரசு சேவை தலைமை ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நஜிப் தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு உதவித்தொகைக்காக அரசாங்கம் மொத்தம் 1 பில்லியன் ரிங்கிட் செலவு செய்கிறது என்றும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.
Comments