அந்த நகலின் அடிப்படையில், கடந்த 1946-ம் ஆண்டு, ஜோகூர் அரசாங்கம் பல்வேறு நிபந்தனைகளுடன், தானா மலாயு கூட்டமைப்பில் இணைய ஒப்புக்கொண்டுள்ளது. அதில் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ சமயம் இஸ்லாம். மாநிலத்தின் நீர், நிலம் ஆகியவை ஜோகூருக்கு மட்டுமே சொந்தம் உள்ளிட்ட நிபந்தனைகள் அடங்கியுள்ளன.
இந்த நிபந்தனைகள் மீறப்படுமானால், ஜோகூர் மலேசியாவிலிருந்து வெளியேறும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று அந்த ‘இண்ஸ்டாகிராம்’ பதிவு காரணம் கூறப்படாமல் அங்கிருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அப்பதிவு செய்யப்பட்டு, புதிதாக 200 பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அதில் பெரும்பாலானவர்கள், ஜோகூர் இளவரசருக்கு ஆதரவு தரும்படியாகவே கருத்துத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) பற்றி அண்மையில் அரசு சார்பற்ற நிறுவனங்களுடன், ‘மறைப்பதற்கு ஒன்றும் இல்லை’ என்ற தலைப்பிலான பொதுவிவாதத்தில் துன் மகாதீர் கலந்து கொண்டார்.
அக்கூட்டத்திற்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் வருவதாக இருந்து கடைசி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக இரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜோகூர் இளவரசர் நஜிப்பின் இந்தச் செயல் குறித்து குறை கூடினார். இதனால் நஸ்ரிக்கும், இளவரசருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.