இன்று இந்நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்த 31 பேர் இறந்ததால், ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்நாட்டில் 160 பேர் ‘மெர்ஸ்’ நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 6,700 பேர் அவர்களின் வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களின் நிலை கண்டறியப்படுவதற்கு முன் நூற்றுக்கணக்கான மக்களுடன் நெருங்கிப் பழகியது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.