Home வாழ் நலம் குழந்தைகளுக்குப் பசியைத் தூண்டும் அத்திப்பழம்!

குழந்தைகளுக்குப் பசியைத் தூண்டும் அத்திப்பழம்!

2226
0
SHARE
Ad

athiஜூன் 23 – அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயைத் தடுக்கும் சக்தி அத்திப்பழங்களுக்கு உண்டு.

சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தப் பழத்தில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் உள்ளன. அத்திப்பழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது.

பெண்கள் தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்துக் காலை எழுந்தவுடன் நீரைக் குடித்து பழத்தை மென்று சாப்பிட்டால் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும்.

#TamilSchoolmychoice

23-1427096540-4-figsகர்ப்பக் காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன், உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாகப் பெறமுடியும்.

சரிவரப் பசி எடுக்காத குழந்தைகளுக்கு அத்திப்பழம் நல்லது. இருமல் உள்ள குழந்தைகளுக்கும் அத்திப்பழம் கொடுக்கலாம். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது இது.

உயரழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.