Home உலகம் அமெரிக்கா நட்பு நாடுகளை வேவு பார்ப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது – ஒபாமா!

அமெரிக்கா நட்பு நாடுகளை வேவு பார்ப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது – ஒபாமா!

456
0
SHARE
Ad

barackobamaபாரிஸ், ஜூன் 25 – பிரெஞ்சு நாட்டின் அதிபர்களை அமெரிக்கா வேவு பார்த்த விவகாரம் தொடர்பாகப் பிரான்ஸ் அதிபருடன் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

அந்த உரையாடலின் போது கடந்த காலத்தில் நட்பு நாடுகளை அமெரிக்கா வேவு பார்த்த செயல் ஏற்றுக்கொள்ளமுடியாது.  அவை உடனடியாக நிறுத்தப்படும் என அவர் கூறியதாகப் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, பிரெஞ்சு நாட்டின் அதிபர்களான ஜாக்குவெஸ் சிராக், நிக்கோலஸ் சர் மற்றும் பிராங்கோய்ஸ் ஹாலண்டே ஆகியோரை அமெரிக்கா வேவு பார்த்ததை விக்கிலீக்ஸ் இணையதளம் நேற்று வெளிப்படுத்தியது.

#TamilSchoolmychoice

இதையடுத்து அறிக்கை ஒன்றின் மூலம் கருத்து தெரிவித்த பிரான்சு அதிபர் ஹாலண்டே, அமெரிக்காவின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்தார்.

2012 முதல் தற்போது வரை அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு நிறுவனம் கண்காணித்ததை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் பிரெஞ்சு அரசில் அங்கம் வகித்த பல்வேறு அமைச்சர்களையும், அமெரிக்காவுக்கான பிரெஞ்சு நாட்டுத் தூதரையும் என்.எஸ்.ஏ. கண்காணித்ததாகவும் கூறியிருந்தது.

இதனால் பிரான்ஸ் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அமைச்சர்கள் மற்றும் ராணுவத் தலைவர்கள் கலந்துகொண்ட அவசரக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குப் பின் அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது”.

“இச்செயலில் ஈடுபட்ட அதிகாரிகளைத் திரும்ப பெறவேண்டும்’ என்று கூறியது. அதே நேரத்தில் பிரெஞ்சு நாட்டுக்கான அமெரிக்கத் தூதரை நேரில் ஆஜராகுமாறு சம்மனும் அனுப்பப்பட்டது.