Home நாடு எம்எச் 370 மாயம்: லித்தியம் பேட்டரிகள் தான் காரணம் – விசாரணை அதிகாரி விளக்கம்!

எம்எச் 370 மாயம்: லித்தியம் பேட்டரிகள் தான் காரணம் – விசாரணை அதிகாரி விளக்கம்!

533
0
SHARE
Ad

mh370_600_1கோலாலம்பூர், ஜூன் 25 – எம்எச் 370 விமானம் விபத்திற்குள்ளானதில் எத்தகைய சதியோ அல்லது வேற்றுக் கிரகவாசிகளின் மந்திர தந்திர காரியங்களோ காரணமில்லை, விமானத்தில் இருந்த லித்தியம் பேட்டரிகள் தான் விமான விபத்திற்குக் காரணம் என எம்எச் 370  விசாரணை அதிகாரிகளில் ஒருவரான புரூஸ் ராபர்ட்சன் தனது இணைய தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எம்எச் 370 விமானம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி மாயமானது முதல் இன்றுவரை விமானத்திற்கு என்ன ஆனது என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஒவ்வொருவரும்  வெவ்வேறான  கருத்துக்களைக் கூறிவருவதால், மக்களுக்கு உண்மை நிலை என்ன என்பது தெரியாமலே போய்விட்டது.

இந்நிலையில், எம்எச் 370 மீட்புக் குழுவில் பணியாற்றிய புரூஸ் ராபர்ட்சன் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “விமானம் மாயமானது குறித்துப் பல்வேறு தரப்பினரும் வேறு வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், உண்மையான நிலை பற்றி இதுவரை யாரும் கூறியதாகத் தெரியவில்லை. இந்தச் சம்பவத்தில் சதியோ அல்லது வேற்றுக் கிரகவாசிகளின் மந்திர தந்திர காரியங்களோ காரணமில்லை. எனது பார்வையில், விமானத்தின் கார்கோ பிரிவில் இருந்த ‘லித்தியம் ஐயான் பேட்டரிகளே’ (lithium-ion batteries) விபத்தை ஏற்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது.”

#TamilSchoolmychoice

“அந்தப் பேட்டரிகளில் இருந்து கொடிய கார்பன் மோனாக்சைடு வாயுவின் வெளியேற்றமும், அதனைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுமே விமானத்தை விபத்தில் சிக்க வைத்துள்ளது. வாயு வெளியான தருணத்தில் துணை விமானி ஃபாரிக், விமானத்தை மேற்குப் புறமாகத் திருப்பித் தரையிறக்க முயன்றுள்ளார். அதில் அவர் தோற்று வீழ்ந்ததால் விமானம் ‘ஆட்டொபைலட் மோட்டிற்கு’ (Autopilot Mode) திரும்பி உள்ளது. அது முதல் விமானம் உலகின் கண்களில் இருந்து மறைந்துவிட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “தென் மேற்குக் கடல் பரப்பில் விமானத்தின் தேடலுக்காக நாம் பெரும் பணத்தைச் செலவழித்துள்ளோம். ஆனால் அவை அனைத்தும் வீணாகி விட்டன. புதிய தேடலை ஆழ்ந்த யோசனையுடன் புதுமையான முறையில் தொடங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டே லித்தியம் பேட்டரிகள் தொடர்பாகப் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுப் பின்னர் ஓய்ந்தநிலையில் புரூஸ் ராபர்சன் மூலமாகச்  சர்ச்சை வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி, 239 பயணிகளுடன் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகரை நோக்கிச் சென்ற எம்எச்370 விமானம் நடுவானில் மாயமானது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனைத்துலக அளவில் தேடுதல் வேட்டை நடத்தியும் இன்று வரை விமானத்தின் பாகமாக எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.